முசலி பிரதேச சபை பற்றிய விபரங்கள்
1. அறிமுகம்
இலங்கையின் வட மாகாணதில் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 04 பிரதேச சபை பிரிவுகளில் முசலி பிரதேச சபையும் ஒன்றாகும். இதன் வடக்கே அரிப்பு அருவியாறும் கிழக்கே மருதமடு தெற்கே மரிச்சிக்கட்டி மேற்கே கடற்கரையும் எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் விஸ்தீரணம் 46,405 ஹெக்டேயர் ஆகும். இப்பிரதேசசபையின் நிர்வாக பரப்பளவில் தமிழர், முஸ்லிம் மற்றும் சிங்களவர் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். முசலி பிரதேசத்தில் 20 கிராம சேவையாளர் பிரிவை கொண்ட 52 கிராமங்கள் காணப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரத்தரவுகளின் படி இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 29,420 பேர்ஆகும். இவர்களில் தமிழர்கள் 4,755 பேரும்இ முஸ்லிம்கள் 24,448 பேரும் மற்றும் சிங்களவர்கள் 217 பேரும்அடங்குகின்றனர்.
முசலி பிரதேச சபையின் முதலாவது மக்கள் பிரதி நிதிகள் சபையானது 2011ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உள்ளுரராட்சி சபைகளுக்கான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டது. இச்சபையானது 09 மக்கள்பிரதிநிதிகளைக் கொண்டிருந்ததோடு 20.04.2011 முதல் 2015 வரை இச்சபையை நிர்வகிதத்து. 2017.02.17 ஆம் திகதிய உள்ளுர் அதிகார சபை தேர்தல்கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இப்பிரசே சபையானது 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டதுடன் நேரடியாக 10 உறுப்பினர்களும் விகிதாசார அடிப்படையில் 06 உறுப்பினர்களுமாக மொத்தம் 16 மக்கள்பிரதிநிதிகனைக் கொண்டசபையாக மாற்றப்பட்டது. இதனடிப்படையில் இரண்டாவது மக்கள்பிரதிநிதிகள் சபையானது 2018 மார்ச் 20ம்திகதியிலிருந்து தற்போதுவரை செயற்பட்டுவருகின்றது.
1. முசலி பிரதேச சபை வட்டார வரை படம்
