மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள முசலி பிரதேச சபையானது தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் சிங்கள தமிழ் முஸ்லிம் பண்டிகைகளை முன்னிட்டு பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை திருத்தம் செய்து கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
முசலி பிரதேசத்தில் சுமார் 65 வீதமான நிலப்பரப்பு காடுகளாகவும் வயல் நிலங்களாகவும் காணப்படுகிறது. இதனால் இருள் சூழ்ந்த இரவுகளில் காட்டு மிருகங்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வெளிச்செல்ல முடியாதவர்களாக உள்ளனர்.
எனவே மக்களில் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எமது சபை செயலாளர் திரு. ஏ சி நஜீப் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக முசலி பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்குகள் திருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

