நூலகசேவைகள்



சிலாவத்துறை,அரிப்பு,பொற்கேணிஆகிய இடங்களில் நூலகம் இயங்கிவருவதுடன் சிலாவத்துறை நூலகம்,அரிப்பு நூலகம் என்பனபுத்தகவசதிகளுடன் காணப்படுகிறது.

வாசகர்கள் ரூபா100 இனை செலுத்திவாசகர் அட்டையினைபெறும் ஒருவர் தனதுவாழ்நாள் முழுவதும் நூலகத்தின் சேவைகளைபெற்றுக்கொள்ளஉரித்துடையவர் ஆகிறார்.


இரவல் வழங்கும் பகுதி

பாடசாலைமாணவர்கள் ரூபா100 இனை மாத்திரம் செலுத்தி இரவல் வழங்கும் பகுதியிலிருந்துஇரு நூல்களை இரவலாகபெறமுடியும் எனினும் விண்ணப்பதாரர் ஒருவருக்குபாடசாலைஅதிபர் பிணையாளியாககையொப்பம் இடவேண்டும்.

வளர்ந்தோர் அங்கத்தவர் ஒருவர் ரூபா200 இனை செலுத்திஅங்கத்தவராவதன் மூலம் இரு நூல்களை இரவல் பெறமுடியும்.எனினும் பிரதேசசபைக்குஆதனவரிசெலுத்தும் ஒருவர் பிணையாளியாககையொப்பம் இடவேன்டும்.அத்துடன் சமயபோதகர்கள்,வைத்தியர்கள்,பாடசாலைஅதிபர்கள்,அரசஉத்தியோகத்தர்கள் இவர்களில் ஒருவர் சிபார்சுசெய்யவேண்டும்.


உடன் உதவும் பகுதி

இப் பகுதியில் உள்ள நூல்களைவாசகர் அட்டைபெற்றுக் கொண்டஒவ்வொருவரும் நூலகத்தில் வைத்துபயன்படுத்துவதற்குஅனுமதிக்கப்படுவர்.


வாசிப்புபகுதி

வாசகர் அட்டையினைபெற்றுக்கொண்டஒவ்வொருவரும் நூலகத்தின் வாசிப்புபகுதியிலுள்ளபத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்பவற்றைபயன்படுத்தஅனுமதிக்கப்படுவர்.

சிறுவர் பகுதி

நூலகத்தின் சிறுவர் பகுதியிலுள்ள நூல்களை நூலகத்தில் வைத்துசிறுவர்கள் ஒவ்வொருமாணவர்களும்பயன்படுத்துவதற்குஅனுமதிக்கப்படுவர்.உரியமுறையில் அங்கத்துவத்துவத்தைபெற்றுக்கொள்வதன் மூலமாகவீட்டிற்குஎடுத்துச்சென்றுபடிக்கஅனுமதிக்ப்படுவர்.