கூழாங்குளம் – அகத்திமுறிப்பு வீதி அபிவிருத்தி தொடர்பாக

முசலி பிரதேச சபைக்கு சொந்தமான கூழாங்குளம் – அகத்திமுறிப்பு (3.1 KM) வீதியானது உலக வங்கி நிதி உதவியுடன் இணைப்பாக்கம் உள்ளடங்கலாக அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் வீதி அதிகார சபையினால் மீள் கட்டுமான பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு முசலி பிரதேச சபையினால் வீதி அதிகார சபைக்கு கடந்த 27.03.2025 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
செயலாளர்
முசலி பிரதேச சபை

முசலி பிரதேச சபையின் உள்ளூர் வேலைத்திட்டங்களுக்கான கேள்வி மனுவிற்கான அழைப்பு கோரப்பட்டுள்ளது

முசலி பிரதேச சபையின் உள்ளூர் அபிவிருத்தி திடத்தின் கீழ் பின்வரும் வேலைத்திட்டங்களுக்கான தகுதிவாய்ந்த ஒப்பந்தக்காரரிடம் இருந்து கேள்வி மனுவிற்கான அழைப்பு கோரப்பட்டுள்ளது.
1. சிலாவத்துறை கடைத்தொகுதி கட்டுமானம் – பகுதி II
2. வெள்ளிமலை பாடசாலை வீதி புனரமைத்தல்
3. சிங்கள புதுக்குடியிருப்பு கடற்கரை வீதி அமைத்தல்

சிங்கள தமிழ் முஸ்லிம் பண்டிகைகளை ஒட்டி முசலி பிரதேச சபை தெரு விளக்குகள் திருத்தும் பணியை ஆரம்பித்தது

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள முசலி பிரதேச சபையானது தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் சிங்கள தமிழ் முஸ்லிம் பண்டிகைகளை முன்னிட்டு பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை திருத்தம் செய்து கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
முசலி பிரதேசத்தில் சுமார் 65 வீதமான நிலப்பரப்பு காடுகளாகவும் வயல் நிலங்களாகவும் காணப்படுகிறது. இதனால் இருள் சூழ்ந்த இரவுகளில் காட்டு மிருகங்கள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வெளிச்செல்ல முடியாதவர்களாக உள்ளனர்.
எனவே மக்களில் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் எமது சபை செயலாளர் திரு. ஏ சி நஜீப் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக முசலி பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்குகள் திருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முசலி பிரதேச சபைக்கான இணைய தளம் வடமாகாண ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு வடிமைக்கப்பட்ட புதிய இணையத்தளங்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் கடந்த 01.03.2024 வெள்ளிக்கிழமை அன்று கலை 10.00 மணியளவில் வட மாகாண பிரதம செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் பொது மக்களிடம் இலகுவில் சென்றடையும் நோக்கில் நவீன தொழில்நுட்ப முறைமையை பயன்படுத்தி UNDP – CDLG திட்ட நிதியின் கீழ் எமது முசலி பிரதேச சபைக்கு புதிய இணையத்தளம் எமது சபை உத்தியோகத்தர்கள் திரு. AKM. சியாத் மற்றும் திரு. S.ஐங்கரன் அவர்களினால் வட மாகாண உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் வழிகாட்டலின் கீழ் எமது சபை செயலாளர் திரு.A.C. நஜீப் அவர்களின் தலைமையில் வடிவமைக்கப்பட்டது.
எமது சபைக்கு புதிதாக இணையத்தளம் வடிவமைத்த எமது உத்தியோகத்தர்கள் திரு. AKM. சியாத் மற்றும் திரு. S.ஐங்கரன் அவர்களுக்கு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை (Commendation) வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வடக்குமாகாண பிரதமசெயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற இணையத்தளம் வடிவமைத்த உத்தியோகத்தர்கள், UNDPஅமைப்பின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எமது முசலி பிரதேச சபையின் இணையத்தளம் சென்று எமது சேவைகளைப் பெற
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தள முகவரியை பயன்படுத்துமாறு பொது மக்களை அன்புடன் வேண்டுகிறோம்.
எமது இணையத்தள முகவரி:
Web address
முசலி பிரதேச சபை
சிலாவத்துறை

இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டுக்கான காரியாலய முதல் நாள்

இன்று (01.01.2024) முசலி பிரதேச சபையின் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டுக்கான காரியாலய முதல் நாள் தேசிய கொடியேற்றல் மற்றும் சத்திய பிரமாண நிகழ்வுகள் சபை செயலாளர் தலைமையில் காரியாலய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றன.

போதை வஸ்து பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு

பாடசாலை மாணவர்களிடையே போதை வஸ்து பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வை முசலி பிரதேச சபை மன்/ சிலாவத்துறை அ.மு.க பாடசாலயில் 13.11.2023 திங்கட்கிழமை நடத்தியது.
முசலி பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம்.சியாத் நெறிப்படுத்தியதுடன் சிலாவத்துறை பாடசாலை அதிபர் ஏ.ரி. றைஸ்தீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் விஷேட உளவள ஆலோசகர் எப்.எம். அஸ்ஹர் மற்றும் பிரதான பொது சுகாதார பரிசோதகர் றூபன் சில்வா அவர்களும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

“2023 சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது” முசலி பிரதேச சபைக்கு கிடைக்கபெற்றது

இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் திணைக்களங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் 2022 ஆம் ஆண்டிற்காக முசலி பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 04.12.2023 அன்று நடைபெற்ற “சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” நிகழ்வில் முசலி பிரேதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

செயற்திறன் விருதுகள் வழங்கிவைப்பு

முசலி பிரதேச சபையில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் 2023 ஆண்டு மேற்கொண்ட செயற்திறன் மிக்க பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சபை செயலாளர் அவர்களினால் 08.01.2024 அன்று சபை மண்டபத்தில் வைத்து விருதுகள் வழங்கி விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியம் வழங்கல் – 𝟐𝟎𝟐𝟑 மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

சனசமூக நிலையங்களின் உள்ளார்ந்த ஆற்றலை வலுப்படுத்தவும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சுமார் பத்து சனசமூக நிலையங்களுக்கு பத்தாயிரம் ரூபா மானியம் வழங்கப்பட்டதுடன் பதின்மூன்று சனசமூக நிலையங்களுக்கு கிரிக்கெட் மற்றும் vollybol விளையாட்டு உபகரணங்களும் 13.12.2023 காலை முசலி பிரதேச சபையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.